எரிமலை வெடிப்பால் சுனாமி… இந்தோனேசியாவில் 20 பேர் பலி

ஜகார்த்தா:
எரிமலை வெடிப்பால் இந்தோனேஷியாவில் சுனாமி ஏற்பட்டு 20 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தோனேஷியாவின் கரகோட்டா எரிமலை வெடிப்பின் காரணமாக சுனாமி ஏற்பட்டுள்ளதாகவும், இதில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவின் சுந்தா ஸ்ட்ரெயிட் பகுதியில் உள்ள கரகோட்டா எரிமலை, கடந்த ஜூலை மாதம் லாவா தீக்குழம்பை கக்கிவருகிறது. தற்போது அதன் உக்கிரம் அதிகரித்துள்ளது.

சுந்தா ஸ்ட்ரெயிட் பகுதி, இந்திய பெருங்கடலின் ஜாவா கடற்பரப்பில், ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை இணைக்கும் பகுதியாக உள்ளது. இப்பகுதியில் கொந்தளித்து வந்துகொண்டிருந்த கரகோட்டா எரிமலை தற்போது வெடிக்கத்துவங்கியு்ளதை தொடர்ந்து கடலுக்கு அடியில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக, சுனாமி ஏற்பட்டுள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சுனாமியில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் பாண்டேக்லாங், தெற்கு லாம்புங் மற்றும் ஷெராங் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!