எல்லை சுவர் கட்டும் நிறுவனத்திற்கே அபராதம்….அமெரிக்காவின் கேலிக்கூத்தான செயல்

அமெரிக்கா-மெக்ஸிகோ இடையே எல்லையை பிரிக்கும் இரும்பு சுவர் எழுப்பி வரும் நிறுவனம் மீதே அமெரிக்கா அபராதம் விதித்துள்ளது திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவிலிருந்து முறைகேடாக அமெரிக்காவுக்கு குடிஎருவரோகளின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தை அடுத்து அங்கு எல்லை சுவர் எழுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டது. இதற்காக கோல்டன் ஸ்டேட் என்ற நிறுவனத்திடம் அமெரிக்க அரசு இந்தப் பணியை ஒப்படைத்தது.

பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில், அமெரிக்க அரசாங்கம் கோல்டன் ஸ்டேட் நிறுவனத்திற்கு 5 மில்லியன் டாலர்களை அபராதம் விதித்ததாம்.

இதன் காரணம் சற்று, கேலிகூத்தாக உள்ளதாக ஊடகங்கள் விமர்சித்துள்ளன.  ஏனெனில் இந்த எல்லைகளின் வழியே மெக்ஸிகோ நாட்டு மக்கள் அத்துமீறி அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுக்கவே இந்த சுவர் எழுப்பும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் கோல்டன் நிறுவனம் அமெரிக்க அரசிடம் முறையான அனுமதி பெறாமல், எல்லை பகுதிகளில் இருக்கும் மெக்ஸிகோ மக்களை கொண்டு இந்த பணிகளை மேற்கொண்டதால், கடுப்பாகிபோன அரசு அதிகாரிகள், 5 மில்லியன் டாலர்களை அபராதமாக விதித்திருக்கிறார்கள்.

Sharing is caring!