எல்லை போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தலைவர்களும் சந்தித்து பேசினர்.

எத்தியோப்பியாவுக்கும், எரிதிரியா நாடுகளுக்கு இடையே கடந்த 1990ம் ஆண்டு ஏற்பட்ட எல்லை போரை தொடர்ந்து வன்முறை சம்பங்கள் தற்போது வரை அதிகரித்துள்ளது. இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இரு நாட்டு தலைவர்களும் எரிதிரியா தலைநகர் அஸ்மரா விமானநிலையத்தில் சந்தித்து பேசினர்.

1998ம் ஆண்டுக்கு பின்னர் இந்த பேச்சுவார்த்தைக்காக எதியோப்பியா பிரதமர் அபி அகமது எரிதிரியாவுக்கு வருகை புரிந்தார். அங்கு அதிபர் இசையாஸ் அஃப்வெர்கியுடன் விருந்தில் கலந்தகொண்டார்.

பேச்சுவார்த்தையில்,‘‘ இரு நாடுகளுக்கு இடையே விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும். துறைமுகங்கள் செயல்பட தொடங்க வேண்டும். இதன் மூலம் எங்கள் மக்கள் வர்த்தகம் மேற்கொள்வார்கள். அடுத்து தூதரகங்களும் திறக்கப்படும். எல்லை பிரச்னை தற்போது இல்லை. பாலம் என்ற அன்பு மூலம் அது தகர்க்கப்பட்டுள்ளது’’ என்று அபி அகமது தெரிவித்தார்.

20 ஆண்டுகளுக்கு பின்னர் இரு நாடுகளுக்கு இடையே நேரடி தொலைதொடர்பு இணைப்புகளை மீண்டும் ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே நடந்த போர் காரணமாக 80 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!