எழுந்து வா தலைவா… கோஷமிட்டபடியே காத்திருக்கும் தொண்டர்கள்

சென்னை:
காத்திருக்கின்றனர் தொண்டர்கள்… கருணாநிதி உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள. எழுந்து வா தலைவா என்று கோஷமிட்டபடி.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த அடுத்த மருத்துவ அறிக்கை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் திமுக தொண்டர்கள் சென்னை காவேரி மருத்துவமனை முன்பு காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் சிறப்பு படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கருணாநிதி உடல்நிலை நேற்று மதியம் பின்னடைவை சந்தித்ததாக அறிவிக்க்பட்டது.

இதனால் கட்சி தலைவர் என்ற பாசத்தில் ஆண், பெண் என பல தொண்டர்கள் வெளிமாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்தவண்ணம் உள்ளனர். மேலும் மருத்துவமனை வளாகம் அருகே தலைவர் திரும்பி வர வேண்டும்… எழுந்து வா தலைவா என கோஷங்கள் எழுப்பியபடி உள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!