எழும்பூர் கோர்ட்டில் சசிகலாவை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு

சென்னை:
சென்னை எழும்பூர் கோர்ட்டில் சசிகலாவை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அந்நியச்செலாவணி முறைகேட்டு வழக்கில் விசாரணைக்காக வரும் 13ம் தேதி எழும்பூர் கோர்ட்டில் சசிகலாவை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தண்டனை பெறும் முன்னர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் மறு குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் வரும் 13 ம் தேதி சசிகலாவை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பெங்களூரு சிறைத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் உறவினர்கள் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனை தொடர்பாக வருமான வரி துறை அதிகாரிகளும் விசாரணை நடத்த சிறைத்துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர். இதற்கான அனுமதியையும் சிறைத்துறை வழங்கி இருக்கிறது. இதுவும் 13 ம் தேதியே அனுமதிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!