எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து

சென்னை:
சாகித்ய அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு, சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். சஞ்சாரம் நூல் மூலம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள எஸ்.ராமகிருஷ்ணனிற்கு தமிழக மக்கள் சார்பாக தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக, முதல்வர் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும், எஸ்.ராமகிருஷ்ணனிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!