ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு வடகொரியா அணுவாயுத விற்பனை…ஐ.நா குற்றச்சாட்டு

ஏமனில் ஹவுத்தி உள்ளிட்ட கிளர்ச்சியாளர்களுக்கு அணுஆயுதங்களை வட கொரியா விற்பனை செய்து வருவதாக ஐ.நா. சிறப்புக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னதாக வட கொரியா அணுஆயுத அழிப்பு நடவடிக்கைகளில் சிறிது அளவும் முன்னேற்றம் இல்லை என குற்றம்சாட்டியிருந்தது.

கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டுகளை முற்றிலும் அழிப்பதாக வடகொரியா ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்படி அந்நாடு செய்யும் நிலையில், படிப்படியாக பொருளாதார தடைகளை நீக்குவது குறித்து பேசுவதாக அமெரிக்கா தெரிவித்தது.

இருப்பினும் வட கொரியாவை அமெரிக்க உளவு செயற்கைகோள்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தன.  இடையே, அணுகுண்டு தயாரிக்க பயன்படும் யுரேனியம் செறிவூட்டப்பட்டும் பணி அங்கு நிறுத்தப்படவில்லை என அவ்வப்போது தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் வட கொரியா மீது ஐ.நா. விதித்திருந்த நிபந்தனைகள் தொடர்பாக 6 மாதங்களாக ஆய்வு செய்த நிபுணர்கள் குழு அதன் அறிக்கையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்தது.

அதில் நிபந்தனைகளை வட கொரியா பின்பற்றவில்லை என்றும் அதோடு சிரியாவுடன் கைகோர்த்து எமன் கிளர்ச்சியாளர்களுக்கு அனுஆயுதங்களை விற்பனை செய்யும் செயல்பாடுகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளது.  இதற்கு கைமாறாக வட கொரியா, ஏமன் மற்றும் சிரியாவிடமிருந்து எண்ணெயை கள்ளத்தனமாக பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தக் காரணங்களை காட்டி அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது.

Sharing is caring!