“ஏமாற்றம்… இது நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஏமாற்றம்”

சென்னை:
ஏமாற்றம்…ஏமாற்றம்… என்று மாணவர்களுக்காக குரல் கொடுத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது:
தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வெழுத தேர்வு மையங்கள் ஒதுக்கியதில் பிரச்னை. கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் குளறுபடிகளை செய்தது – என நம் மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கிய சிபிஎஸ்இ தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!