ஏரோ இந்தியா கண்காட்சியை இடமாற்றம் செய்ய முயற்சி… துணை முதல்வர் குற்றச்சாட்டு

பெங்களூரு:
முயற்சி… முயற்சி… இடமாற்றம் செய்ய முயற்சி நடக்கிறது என்று கர்நாடக முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். என்ன விஷயம் தெரியுங்களா?

வரும் 2019-ல் நடைபெற உள்ள ஏரோ இந்தியா -2019 கண்காட்சி பெங்களூருவில் இருந்து இடமாற்றம் செய்ய முயற்சி நடப்பதாக கர்நாடக துணை முதல்வர் குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: கர்நாடக மாநிலத்தில் கடந்த1996-ம் ஆண்டு முதல் இந்தியன் ஏர் போர்ஸ் அன்ட் பைனயல் ஏர் ஷோ மற்றும் விமான கண்காட்சி, ஏரோ இந்தியா கண்காட்சி நடைபெற்றுவருகிறது. இந்தாண்டுக்கான கண்காட்சி பெங்களூருவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பாதுகாப்பு துறையில் பெங்களூருவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ஏரோ இந்தியா- 2019 கண்காட்சியை இடம் மாற்றம் செய்வது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்பட வில்லை எனவும், 2019ம் ஆண்டிற்கான அரங்கு குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!