ஏர் இந்தியாவை மீட்டெடுக்க புத்துயிரூட்டும் திட்டம்… மத்திய இணை அமைச்சர் தகவல்

புதுடில்லி:
புத்துயிரூட்டும் திட்டம்… புத்துயிரூட்டும் திட்டம்… ஏர் இந்தியா நிறுவனத்திற்காக மத்திய அரசு தயாரித்துள்ளது.

இதுகுறித்து விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர், ஜெயந்த் சின்ஹா லோக்சபாவில் கூறியதாவது:

ஏர் இந்தியாவிற்கு புத்துயிரூட்டி, லாபப் பாதைக்கு திரும்ப, சிறப்பு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த நிதியுதவி மாற்று தொழில்களின் கடன் மற்றும் சொத்துகளை, தனி நிறுவனத்தின் கீழ் மாற்றுவது, நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் செய்வது உட்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மாறுபட்ட வர்த்தக கொள்கைகள் மூலம், துணை நிறுவனங்களின் முக்கிய தொழில்கள் மேம்படுத்தப்படும்.புதிய வர்த்தக அணுகுமுறை மூலம், ஏர் இந்தியா, அதிகபட்ச செயல் திறனில் இயங்க, நடவடிக்கை எடுக்கப்படும். பயன்படுத்தப்படாத சாதனங்கள், ரியல் எஸ்டேட் சொத்துகள் விற்பனை செய்யப்படும்.

இந்த வகையில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், ஏர் இந்தியாவின் சொத்து விற்பனையில், இதுவரை, 410 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. அத்துடன், வாடகை வருவாயாக, 314 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!