ஐதராபாத் குண்டு வெடிப்பு… இன்று தீர்ப்பு

ஐதராபாத்:
இன்று தீர்ப்பு… இன்று தீர்ப்பு வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐதராபாத் தலைமை செயலகம் அருகே 11 ஆண்டுகளுக்கு முன் நடந்த, இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில், இன்று (27ம் தேதி) தீர்ப்பு வழங்கப்படுகிறது.

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் தலைமை செயலகம் அருகே 2007ல், அடுத்தடுத்து இரண்டு இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. லும்பினி பூங்கா மற்றும் கோகுல் சாட் உணவகம் ஆகிய இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்ததில், 42 பேர் உடல் சிதறி பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரித்து இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த அனீக் சபிக் சையது, முகமது சாதிக், அக்பர் இஸ்மாயில் சவுத்ரி, அன்சார் அகமது பாதுஷா ஷேக் ஆகியோரை கைது செய்தது. நான்கு பேரும் தற்போது, செரலபள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில், ஐதராபாத் பெருநகர இரண்டாவது குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!