ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வௌியேறுவதற்கான ஒப்பந்தத்தின் நிச்சயமற்ற தன்மை

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தைக் கைவிடுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு, பிரித்தானிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

பிரித்தானிய பிரதமர் தெரெசா மேயினால் பிரேரிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வௌியேறுவதற்கான ஒப்பந்தத்தின் நிச்சயமற்ற தன்மை காரணமாக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

பிரெக்ஸிட் திட்டத்தின்படி, ஐரோப்பிய ஒன்றியத்ததிலிருந்து வௌியேறுவதற்கு பிரித்தானியாவிற்கு இன்னமும் 101 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அரசாங்கத்தின் இந்த உடன்படிக்கைக்கு தமது எதிர்ப்பினை வௌியிட்டு வருகின்றனர்.

பிரெக்ஸிட் உடன்படிக்கை தொடர்பான வாக்கெடுப்பு பிரித்தானிய பாராளுமன்றத்தில், எதிர்வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், நேற்றையதினம் அமைச்சர்கள் கூடி பிரெக்ஸிட் திட்டத்தை நிறுத்தும் உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதை தடுப்பதா இல்லையா என்பது குறித்து நீண்டநேரம் கலந்துரையாடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்தே, குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Sharing is caring!