ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்ஸிட் (Brexit) ஒப்பந்தத்தில் எவ்விதமான திருத்தங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்ஸிட் (Brexit) ஒப்பந்தத்தில் எவ்விதமான திருத்தங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என பிரித்தானிய பிரதமர் தெரெசா மே தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமது கட்சியிலுள்ள எதிர்ப்பாளர்களையும் அவர் சாடியுள்ளார்.

அடுத்த ஆண்டு மாரச் மாதம் 29 ஆம் திகதியுடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகவுள்ளது.

இருப்பினும், அது முழுமையான விலகலாக இருக்காது எனவும் சில விடயங்களில் தொடர்ந்தும், அவ்வமைப்புடன் இணைந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரதமரின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த சிலர், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகக்கூடாது எனவும் பிரெக்ஸிட் திட்டம் தொடர்பில் மீண்டும் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.

இந்த நிலையிலேயே தெரேசா மேயினால் குறித்த இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வௌியேறினாலும், வடக்கு அயர்லாந்து மற்றும் ஐரிஷ் குடியரசு ஆகியன தொடர்ந்தும் அதில் அங்கம் வகிப்பதற்கு எவ்வித எல்லைகளும் நிர்ணயிக்கப்படமாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sharing is caring!