ஐ.எஸ் தளபதி கொலை….அமெரிக்க கூட்டுப்படை தெரிவிப்பு

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது காபுல்.

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் ஒரு சில பகுதிகளில் இருந்து வருகிறது. தலிபான், ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளை ஒடுக்க அந்நாட்டு பாதுகாப்பு படையும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு படைகளும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.

அதன்படி, கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்க கூட்டுப்படைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ராணுவம் இணைந்து ஐ.எஸ் அமைப்பு பதுங்கி இருந்ததாக கருதிய இடங்கள் மீது பல்வேறு வித தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஐ.எஸ் இயக்கத்தின் தலைமை தளபதி அபு சயீத் உயிரிழந்ததாக அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஷா உசைன் தெரிவித்துள்ளார்.

இதே தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் தலைவனாக செயல்பட்டு வந்த அபு சாட் எர்ஹாபி என்பவன் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!