ஐ.நா. அறிக்கையில் உள்நோக்கம்… ராணுவ தளபதி சொல்றார்

புதுடில்லி:
ஐ.நாவின் அறிக்கை உள்நோக்கத்துடன் வெளியிடப்படுள்ளதாக இந்திய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் தொடர்பாக ஐ.நா., வெளியிட்ட அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராணுவ தளபதி பிபின் ராவத், அறிக்கை உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், மனித உரிமை தொடர்பாக இந்திய ராணுவத்தின் சாதனை குறித்து நான் உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை. அனைவருக்கும் நன்கு தெரியும். காஷ்மீர் மக்கள் மற்றும் சர்வதேச சமுதாயத்தினருக்கும் தெரியும்.

ஐ.நா.,வின் அறிக்கை குறித்து கவலைப்பட தேவையில்லை என நினைக்கிறேன். இந்த அறிக்கை உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார்.

காஷ்மீரில் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா., வெளியிட்ட அறிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்ததுடன், அதனை நிராகரிப்பதாகவும் தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!