ஐ.நா அறிக்கை ஏற்க முடியாது…இராணுவத்தை விசாரிக்க முடியாது..மியன்மார்

ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் குறித்து இராணுவ அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற ஐ.நா வின் அறிக்கையை மியன்மார் நிராகரித்துள்ளது.

மனித உரிமைகள் சபையினால் முன்வைக்கப்படும் எந்தவொரு தீர்மானங்களையும் தமது நாடு ஏற்றுக்கொள்ளவோ இணங்கவோ மாட்டாது என அரசாங்கப் பேச்சாளர் ஸோ டே தெரிவித்துள்ளார்.

ஐ.நா வின் அறிக்கைக்கு எதிராக முன்னர் குரல்கொடுத்த சீனா, உதவியில்லாதிருக்கும் மியன்மார் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகக் கூறியது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மியன்மார் மிகவும் சகிப்புத்தன்மையுடன் இருப்பதாகவும் ஸோ டே மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மியன்மாரின் ராக்கின் பிராந்தியத்தில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கு உலகளாவிய ரீதியில் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்தநிலையில், இந்த விடயம் தொடர்பில் மியன்மார் இராணுவ அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என நேற்று முன்தினம் (27) ஐ.நா. அறிக்கை ஒன்று வௌியிட்டிருந்தது.

இந்தநிலையில், முன்னெப்போதும் இல்லாத ஐ.நா வின் அறிக்கைக்கு முதலாவது பதிலாக ஸோ டேவின் அறிக்கை அமைந்துள்ளது.

Sharing is caring!