ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சொல்ஹெய்ம் இராஜினாமா

ஐக்கிய நாடுகள் சபையின் நெறிமுறைகளுக்கு மாறாக பயணத் திட்டங்களுக்கு அதிகசெலவு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) இராஜினாமா செய்துள்ளார்.

இந்த அமைப்பின் தலைவராக பதவிவகித்து வந்த எரிக் சொல்ஹெய்ம் தனது அதிகாரபூர்வ பயணங்களுக்காக கிட்டத்தட்ட 5 இலட்சம் அமெரிக்க டொலர்கள் செலவிட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரம், தனது மேற்பார்வையில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கான பணத்தைத் தான் செலுத்தியுள்ளதாக எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், எரிக் சொல்ஹெய்மின் இராஜினாமாவை ஐ.நா. பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டதாக ஐ.நா. பேச்சாளர் ஸ்டெப்னி டஜாரிக் (Stephane Dujarric) தெரிவித்துள்ளார்.

Sharing is caring!