ஐ.நா.வின் மிக உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கல்

புதுடில்லி:
ஐ.நா.வின் மிக உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐ.நா.,வின் சுற்றுச்சூழலுக்கான மிக உயரிய விருதான சாம்பியன்ஸ் ஆப் எர்த் என்ற விருது பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விருதை ஐ.நா., பொதுச் செயலாளர் மோடிக்கு வழங்கினார்.

சர்வதேச சூரிய ஒளி மின்சாரத்திற்கான கூட்டமைப்பை உருவாக்கியது, ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கை 2022ம் ஆண்டிற்குள் முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுத்தது உட்பட சுற்றுச்சூழலை மாற்றி அமைப்பதற்கான 6 சாதனைகளுக்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கொள்கை அடிப்படையிலான தலைமை என்ற பிரிவின் கீழ் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கான ஐ.நா.,வின் உயரிய விருதை பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றுள்ளார்.

இதற்கான விழாவில் பேசிய மோடி, இது எனக்கு கிடைத்தது மிகப் பெரிய மகிழ்ச்சி. இது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் தருணம். இந்த விருதை ஒவ்வொரு இந்தியனுக்கும் அர்ப்பணிக்கிறேன். சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியர்கள் உறுதி பூண்டுள்ளனர். 125 கோடி இந்தியர்களால் தான் இந்த விருது சாத்தியமாகி உள்ளது என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!