ஒகேனக்கல் மக்களுக்கு எச்சரிக்கை…காவிரி 2 இலட்சம் கன அடி நீர் திறப்பு

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 2 லட்சம் கன அடி நீர் வரை திறந்துவிடப் படவுள்ளதால், ஒகேனக்கல் பகுதியில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணைகளின் கொள்ளளவை தாண்டி நீர்வரத்து அதிகரித்து வருவதால், தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீர், ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை அடைகிறது. நேற்று வரை 1,50,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில், இன்று அது 1,70,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 2 லட்சம் கன அடியை தொடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒகேனக்கல்லில் கரையோர பகுதிகளில், வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு நீர் புகுந்து வருவதால், நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார். பேரிடர் மீட்புக் குழுவினரும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

Sharing is caring!