ஒட்டுக்கேட்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஆப்பிள் ஐபோன் அழைப்புகளை சீனா மற்றும் ரஷ்யா ஒட்டுகேட்பதாக நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள சீனா டிரம்ப்-ஐ பகடி செய்துள்ளது.

ஆப்பிள் ஐபோனுக்கு பதிலாக சீனாவில் தயாரிக்கப்படும் செல்பேசிகளை பயன்படுத்துமாறு, சீனாவின் மறுப்பை தெரிவித்தபோது சீன வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

இந்த செய்தியை எழுதியவருக்கு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்

Sharing is caring!