ஒப்பந்த ஊழியர்கள் ஸ்டிரைக்… ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்

மும்பை:
ஒப்பந்த ஊழியர்கள் ஸ்டிரைக்கால் ஏர் இந்தியா விமானங்கள் தாமதமாக புறப்பட்டது.

ஏர் இந்தியா போக்குவரத்து சேவை கழக ஒப்பந்த ஊழியர்கள், மும்பை விமான நிலையத்தில் நேற்று இரவு முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால், அங்கிருந்து விமானங்கள் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டது.

அதிகாரி ஒருவர் கூறுகையில், ஊழியர்களின் திடீர் போராட்டத்தால், விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. சூழ்நிலையை ஆராய்ந்து வருகிறோம். பாதிப்பை தவிர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: நிரந்தர ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு மும்பை விமான நிலையத்தில் பிரச்னை சரி செய்யப்பட்டது. காலையில் புறப்பட வேண்டிய விமானங்கள் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டன என தெரிவித்து உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!