ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்… முதல்வர் குற்றச்சாட்டு

புதுடில்லி:
டில்லியில் ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளனர் முதல்வரும், துணை முதல்வரும்.

இதுகுறித்து முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:

தேர்தலில் ஓட்டளிப்பது ஒவ்வொரு வாக்காளரின் ஜனநாயக கடமை, அதனை நிறைவேற்றவிடாமல் தடுக்க முயற்சி்ப்பது ஜனநாயகத்தை கொலை செய்வதற்கு சமம்.

அந்த வகையில் டில்லியில் ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று வாக்காளர் இறந்திருக்க வேண்டும் இல்லையெனில் அவர் முகவரி மாறியிருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் திட்டமிட்டே ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!