ஒரே பஸ்சில் பயணம் செய்த எதிர்கட்சி தலைவர்கள்… டுவிட்டரில் படத்தை வெளியிட்ட ராகுல் காந்தி

புதுடில்லி:
எதிர்கட்சிகளை சேர்ந்த அனைத்து தலைவர்களும் ஒன்றாக பஸ்சில் சென்ற படத்தை வெளியிட்டுள்ளார் காங்., தலைவர் ராகுல் காந்தி.

ராஜஸ்தான் மாநிலத்திற்கு நடந்த சட்டசபை தேர்தலில் காங். பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்றார். இதில் காங். தலைவர் ராகுல், தேசியவாத காங். தலைவர் சரத் பவார், முன்னாள் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் காங். மூத்த தலைவர் மன்மோகன்சிங், தேசிய மாநாட்டு கட்சி பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இவர்கள் பதவியேற்பு விழா நடந்த இடத்திற்கு பங்கேற்பதற்காக ஒரே பஸ்சில் பயணித்தனர். இந்த பஸ்ஸில் மாயாவதி, மம்தா, அகிலேஷ் செல்லவில்லை. அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் பஸ்ஸில் செல்லும் புகைப்படத்தை ராகுல் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!