ஒரே வழித்தடத்தில் 3 விமானங்கள்… விபத்தை தவிர்த்த அதிகாரிகள்

புதுடில்லி:
ஒரே வழித்தடத்தில் 3 விமானங்கள் வந்து ஒன்றோடு ஒன்று மோத இருந்ததாம். இந்த தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 23ம் தேதி டில்லி வான் மண்டலத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து ஹாங்காங்கிற்கு ஒரு விமானம் சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் அதே தடத்தில் ஆம்ஸ்டர்டாமில் இருந்து பாங்காங் செல்லும் ஒரு விமானம் வந்து கொண்டிருந்தது.

மேலும் ஈவா ஏர் விமானம் பாங்காக்கில் இருந்து வியன்னாவிற்கு சென்று கொண்டிருந்தது. இவை மூன்றும் ஒரே வழித்தடத்தில் வந்து கொண்டிருந்தன. இதை டில்லி விமானநிலைய வான் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கண்டுபிடித்து 3 விமானங்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அந்த விமானங்களின் பறக்கும் உயரம் அவசர, அவசரமாக மாற்றப்பட்டு ஓரிரு நிமிடங்களில் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 500க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். 3 விமானங்களையும் ஒரே வழித் தடத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டது எப்படி என்பது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!