ஓட்டுக்கள் வைத்த அறைக்கு முன்பாக சுவர் எழுப்பி பாதுகாப்பு

பமேடரா:
பதிவான ஓட்டுக்கள் பாதுகாப்பாக அறையில் வைத்து சீல் வைத்து சுவரும் எழுப்பப்பட்டுள்ளது. எங்கு தெரியுங்களா?

சத்தீஸ்கர் மாநிலம், பெமிதாரா மாவட்டத்தில், சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டு இயந்திரங்களை பாதுகாக்க அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டதுடன், சுவரும் எழுப்பப்பட்டுள்ளது.

90 சட்டசபை தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது, நக்சல் பாதித்த மாவட்டங்களில் உள்ள 18 தொகுதிகளில் கடந்த 12 தேதியும், மற்ற மாவட்டங்களில் உள்ள 72 தொகுதிகளில் கடந்த 20ம் தேதியும் ஓட்டுப்பதிவு நடந்தது.

ஓட்டு எண்ணிக்கை வரும் டிச. 11 தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் பெமெதிரா மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் பதிவான மின்னணு ஓட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக ஒரு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து அறை வாசலை மறித்து சுவரும் எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து கலெக்டர் மகாதேவ் காவ்ரே கூறுகையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க சுவர் எழுப்பியுள்ளோம். அறை கதவு பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இருப்பினும், கூடுதல் பாதுகாப்புக்காக சுவர் எழுப்பப்பட்டது.

ஓட்டு இயந்திரங்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அங்கு பாதுகாப்புக்கு 120 ரிசர்வ் படை போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. விதிகளின்படி தான் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு கடந்த தேர்தலின் போது எப்படி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என விசாரித்தேன்.

அப்போது அறை கதவின் பாதி அளவுக்கு சுவர் எழுப்பப்பட்டதாக கூறினர். எனவே, முறைகேடு அல்லது மோசடி புகார் வராமல் இருக்க முழுவதும் சுவர் எழுப்ப முடிவு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!