ஓட்டுச் சீட்டு முறை மீண்டும் வேண்டும்…. 70 சதவீத கட்சிகள் வலியுறுத்தல்

புதுடில்லி:
ஓட்டு சீட்டு முறை வேண்டும்… வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் வலியுறுத்தியுள்ளன 70 சதவீத கட்சிகள்.

2019 லோக்சபா தேர்தல் குறித்து தேர்தல் கமிஷன் நேற்று நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நடந்த விவாதம் குறித்து, காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளதாவது:

மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது. அதனால், மீண்டும் ஓட்டுச் சீட்டு முறைக்கே மாற வேண்டும் என 70 சதவீத கட்சிகள் வலியுறுத்தின; இதில், பா.ஜ., தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

அவ்வாறு இல்லாத பட்சத்தில், ஓட்டுப் பதிவு இயந்திர முறையை மேம்படுத்த வேண்டும். வி.வி.பி.ஏ.டி., எனப்படும் ஓட்டு உறுதிச் சீட்டு இயந்திரத்தை, 30 சதவீத ஓட்டுப் பதிவு மையங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!