ஓய்வு ஐஏஎஸ் அதிகாரிக்கு மலேசியாவின் உயர்ந்து விருது
தேனி:
ஓய்வு ஐஏஎஸ் அதிகாரிக்கு மலேசியாவின் உயர்ந்து விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திரனுக்கு மலேசியாவின் உயரிய ‘தான்ஸ்ரீ சோமா’ இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் வடகரையை சேர்ந்த ராஜேந்திரன் ஓய்வு பெற்ற பின் தற்போது தமிழக கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக உள்ளார்.
‘வந்தவாசி போர், சோழர்கால செப்பேடு, பாண்டியர், சேரர், பல்லவர் கால செப்பேட்டு நுால்கள், வடகரை, ‘1801’ஆகிய நுால்களை எழுதியுள்ளார். இதில் ‘1801’ நுாலுக்கு மலேசியாவின் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம், தான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் அறக்கட்டளை சார்பில் விருது, எட்டு லட்ச ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
‘1801’ நுால் இந்திய சுதந்திர வரலாற்றில் விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் துவங்கியது என்பதை விவரிக்கிறது. விருது வழங்கும் விழா கோலாலம்பூரில் வரும் 17ம் தேதி நடக்கிறது.
நன்றி– பத்மா மகன், திருச்சி