ஓய்வு போதும்… பணிக்கு வர்றேன்… அருண் ஜெட்லி விரைவில் பணிக்கு வர்றார்…!

புதுடில்லி:
ஓய்வு போதும்… மீண்டும் பணிக்கு வர்றேன் என்று அருண்ஜெட்லி ரிட்டர்ன் பேக் ஆகிறார்.

பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து சிறுநீரக அறுவை மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவர் ஓய்வெடுத்து வந்தார். இதன் காரணமாக அவர் வகித்து வந்த நிதியமைச்சர் பதவி, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது. டாக்டர்கள் அறிவுரைப்படி அவர் ஓய்வெடுத்து வந்தார்.

ஓய்வில் உள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, இந்த மாதத்திலேயே மீண்டும் பணிகளை துவக்க உள்ளதாக டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுவதாவது:

நார்த் பிளாக்கில் முதல் தளத்தில் உள்ள ஜெட்லியின் அறையில் புதுப்பித்தல் மற்றும் தூய்மைபடுத்தும் பணி நடக்கிறது. இதன் மூலம் அவருக்கு நோய் தொற்று ஏற்படுவது தடுக்கும். டாக்டர்கள் வழங்கிய ஓய்வு காலம் ஆகஸ்ட் மாத மத்தியில் முடிகிறது. இதனால், இந்த மாத மத்தியில் ஜெட்லி பணிக்கு திரும்புவார் என தெரிகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!