கஜா புயலால் விழுந்த மரங்களை அகற்ற இயந்திரங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு

சென்னை:
கஜா புயலால் விழுந்த மரங்களை அகற்ற இயந்திரங்கள் வாங்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

கஜா புயலில் விழுந்த மரங்களை உடனடியாக அகற்றவும், அதற்கான இயந்திரங்கள் வாங்கவும் ரூ.7.60 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே, புயல் பாதித்த 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த டிச.,31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, மின்வாரியத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!