கஜா புயலுக்கு நிவாரண நிதி… ரூ. 127 கோடி வந்துள்ளது… தமிழக அரசு தகவல்

சென்னை:
ரூ.127 கோடிக்கு மேல் நிவாரண நிதி வந்து சேர்ந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

டெல்டா மாவட்டத்தை கஜா புயல் சின்னாபின்னமாக்கி விட்டது. இதனால் இந்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.

தொடர்ந்து நிவாரண நிதி வழங்கும்படி பொது மக்களுக்கு தமிழக அரசு, முதல்வர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.127.22 கோடி வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் மக்களிடமிருந்து நிதி கிடைத்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!