கஜா புயலுக்கு நிவாரண நிதி திரட்டிய நாட்டுப்புற கலைஞர்கள்

மதுரை:
நாட்டுப்புற கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தி கஜா புயலுக்காக நிவாரணம் திரட்டி உள்ளனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடலுார், நாகை போன்ற பகுதிகளுக்கு நிதியுதவி அளிக்க நாட்டுப்புற கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், பூ மார்க்கெட் பகுதிகளில் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

இதன் மூலம் திரட்டப்படும் நிதியை கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அளிக்க உள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!