கஜா புயல் நிவாரணமாக 1146 கோடி ரூபாய் ஒதுக்கிய மத்திய அரசு

புதுடில்லி:
கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு 1146 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு நிவாரணமாக மத்திய அரசு ரூ. 1,146.12 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

புயல் பாதிப்பு சீரமைக்க தமிழக அரசு தரப்பில் ரூ. 15 ஆயிரம் கோடி கேட்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்னதாக மத்திய அரசு ரூ.353 கோடியை வழங்கியது. இந்நிலையில் தேசிய பேரிடர் நிதியில் இருந்து ரூ. 1,146.12 கோடியை ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான உயர்மட்டக்குழு கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!