கஜா புயல் நிவாரண நிதிக்கு சன் குழுமம் ரூ.2 கோடி வழங்கியது

சென்னை:
கஜா புயல் நிவாரண நிதியாக சன் குழுமம் ரூ. 2 கோடி வழங்கி உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 10 – 12 நாட்களுக்கு முன்னர் தமிழக டெல்டா பகுதிகளை கஜா புயல் கடுமையாக தாக்கிய நிலையில், இன்னும் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த புயலால்  தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதிப்புகளை சீரமைக்க பலர் நிதி அளித்து வருகின்றனர். அந்த வகையில் சன் குழுமம் கஜா புயல் நிவாரண பணிக்கு ரூ.2 கோடி நிதி அளித்தது.

இந்த ரூ.2 கோடி நிவாரண நிதியை, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக சென்று சன் குழும நிர்வாகிகள் வழங்கினர். டெல்டா மாவட்டங்களின் பாதிப்பு கடுமையாக உள்ள நிலையில் ரூ. 200 கோடியை மட்டும் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!