கஜா புயல் நிவாரண நிதி… கேரளா ரூ.10 கோடி அளிக்கிறது
திருவனந்தபுரம்:
கஜா புயல் நிவாரண நிதியாக கேரளா ரூ.10 கோடி நிதி அறிவித்துள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.10 கோடி நிதி வழங்குவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;
கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழக சகோதரர்களுக்கு கேரள மக்களின் ஆதரவை தெரிவிக்கிறோம். புதன் கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவசர உதவியாக 10 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வழங்க முடிவு செய்தோம்.
உணவு, துணி, ஆடைகள் உட்பட்ட 14 லாரி அவசர பொருட்கள் ஏற்கனவே அனுப்பி வைத்தோம். ஆறு மருத்துவக்குழுவும் கேரளா மின்சார வாரியத்தை சேர்ந்த 72 ஊழியர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேவை என்றால் மேலும் உதவியை அனுப்புவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S