கடத்தப்பட்ட 79 பேரும் விடுவிப்பு… கேமரூனில் பரபரப்பு ஓய்ந்தது

யவுன்ட்:
கடத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகள் உட்பட 79 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில், ஆங்கிலம் பேசுவோர் வசிக்கும் பமென்டா நகரில் பள்ளி குழந்தைகள் உட்பட, 79 பேர் கடத்தப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அந்நாட்டு அரசு மற்றும் ராணுவம் கடத்தப்பட்டவர்களை தேடி வந்த நிலையில், கடத்தப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகவலை அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் இசா பகாரே சிரோமா உறுதிப்படுத்தி உள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!