கடந்தது… கரையை கடந்தது தித்லி புயல்… இன்று அதிகாலை

புவனேஸ்வர்:
கடந்தது… கடந்தது… கரையை கடந்தது தித்லி புயல்… ஒடிசா- ஆந்திரா இடையே கரையை கடந்தது.

வங்கக்கடலில் சென்னைக்கு அருகே உருவான தித்லி புயல் அதி தீவிரமாக உருவெடுத்தது. இருப்பினும் தமிழகம் தப்பியது. இந்நிலையில் ஆந்திரா-ஒடிசா இடையே கடலோர பகுதிகளை நோக்கி புயல் மேற்கொண்டதால் அம்மாநிலங்களுக்கு ரெட் அலார்ட் விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று ஒடிசா – ஆந்திரா இடையே அதிகாலை 5.30 மணி அளவில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்ததன் தாக்கம் காரணமாக ஒடிசா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. மரங்கள் முறிந்து விழுந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரங்களில் வசிக்கும் மக்கள் 3 லட்சம் பேர் வரையில் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேசிய மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!