கடன் தள்ளுபடி… முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்படும்… அமைச்சர் தகவல்

திருத்துறைப்பூண்டி:
பாதிக்கப்பட்டு இருந்தால் கடன் தள்ளுபடி பற்றி முதல்வருக்கு தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புயலால் பயிர் பாதிக்கப்பட்டிருந்தால், பயிர் கடன் தள்ளுபடி கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் செல்லுார்ராஜூ தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

ரேசன் கடை பணியாளர்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் தகுதி அடிப்படையில் தற்காலிக பணியாளர்களை நியமிக்க ஏற்பாடு நடக்கிறது. பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பயிர்கடன் தள்ளுபடி செய்யும் கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!