கடலே இரத்த வெள்ளத்தில்….டென்மார்க்கில் திமிங்கிலம் கொல்லும் விழா

டென்மார்க் தீவு ஒன்றில் திமிங்கலங்கள் படுகொலை செய்யப்படுவதால் அதன் உடலிலிருந்து வெளியாகும் ரத்தம் கடலில் கலந்து அங்குள்ள கடலே ரத்த வெள்ளமாக காட்சியளிக்கிறது.

டென்மார்க்கில் பரோயே என்ற தீவு உள்ளது.  இந்த தீவில் ஆண்டுதோறும் கோடை காலத்தின் முடிவில் அங்குள்ள கடலில் வாழும் திமிங்கலங்களை கொல்லும் திருவிழா நடைபெறுகிறது. படகு மூலம் அந்தத் தீவு மக்கள் படகு மூலம் கொண்டாட்டமாக கடலுக்குள் செல்கின்றனர். பின்னர் அங்கிருந்து ஈட்டி போன்ற ஆயுதங்கள் கொண்டு திமிங்களை முற்றுகையிட்டு கரைக்கு ஓட்டி வருகின்றனர்.

பின்னர் கடற்கரையில் ஒதுங்கும் திமிங்கலங்களை கூரிய கத்தி, ஈட்டி போன்றவற்றால் வெட்டிக் கொல்கின்றனர்.  இதில் பாரம்பரியாமாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கலந்துகொண்டு திமிங்கலை கொல்கின்றனர். இந்த நிகழ்ச்சியை காலகாலமாக 16ஆம் நூற்றாண்டில் இருந்து நடைபெறுகிறது. இந்த ஆண்டு மட்டும் 180 திமிங்கலங்கள் கொல்லப்பட்டுள்ளன.

இந்த திருவிழாவுக்கு உலகம் முழுவதிலும் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமிங்கலங்கள் கொல்லப்படுவதால் அதன் உடலிலிருந்து வெளியாகும் ரத்தத்தால் அங்குள்ள கடலே ரத்த வெள்ளமாக சிவப்பாக காட்சியளிக்கின்றது.

இருப்பினும் எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் பரோயே மக்கள் அதனை கண்டுகொள்ளாமல் ஆண்டுதோறும் திருவிழாவை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Sharing is caring!