“கடுங்குற்றம்… நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு கடும் குற்றம்”

சென்னை:
கடுங்குற்றம்… கடுங்குற்றம்… என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. எதற்காக தெரியுங்களா?

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்வது கடுங்குற்றம் என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது. சென்னை அயனாவரத்தில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த கோர்ட், நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு பட்டா தர உத்தரவிட முடியாது.

அரசு நிலத்தை ஆக்கிரத்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றாமல் அதிகாரிகள் கடமை தவறியுள்ளனர். சிறு மழைக்கு சென்னை நகரம் வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு மனித தவறு தான் காரணம்.

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்வது கடுங்குற்றம். 3 வாரங்களில் ஆக்கிரமிப்பை அகற்றுவதுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுவது தான் அரசின் கடமை. ஆக்கிரமிப்பை அகற்றாதவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கூடாது, இவ்வாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!