கடும் பனிப்பொழிவு… பாக்., தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைய திட்டம்

புதுடில்லி:
கடும் பனிப் பொழிவை சாதகமாக்கிக் கொண்டு பாக்., தீவிரவாதிகள் இந்தியாவுக்கு நுழைய திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீர் எல்லையில், கடும் பனிப்பொழிவு நிலவுவதால், பஞ்சாப் வழியாக இந்தியாவுக்குள் நுழைய, பாக்., பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. பஞ்சாப் மாநிலத்துக்கு மிக அருகே, பாக்., எல்லையில், ஷாகர்கர் பல்கி என்ற இடம் உள்ளது.

இங்கு, 10 – 15 பாக்., பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.ஜம்மு – காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவுவதாலும், காஷ்மீர் எல்லைப் பகுதியில், இந்திய ராணுவம், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாலும், பாக்., பயங்கரவாதிகளால் அவ்வழியே, இந்தியாவுக்குள் ஊடுருவ முடியவில்லை.

எனவே, பஞ்சாப் வழியே விரைவில் இந்தியாவுக்குள் நுழைய அவர்கள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை அறிக்கை தெரிவிக்கிறது. இதையடுத்து, பஞ்சாபில், ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘பஞ்சாபில், பாக்., பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது; இதற்கு, பாக்., ராணுவ தலைமை தளபதி குவாமர் ஜாவித் பாஜ்வா காரணம்’ என, பஞ்சாப் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான அமரிந்தர் சிங், சமீபத்தில் குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!