கடும் பனி… வரலாற்றில் இல்லாத அளவிற்கு காஷ்மீரில் கடும் பனி

ஜம்மு:
11 ஆண்டில் இல்லாத அளவிற்கு காஷ்மீரில் பனி கொட்டி வருகிறது.

காஷ்மீரில் கடந்த11 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு பனி வாட்டி வதைத்து வருகிறது. கடந்த திங்கள் கிழமை இரவு மைனஸ்
6.8 டிகிரி செல்சியஷ் வெப்பநிலை பதிவானது.

தெற்கு காஷ்மீர், கோகரங், குப்வாரா பகுதிகளில் கடும் குளிர் இருந்தது. இது போன்ற குளிரால் காஷ்மீர் தால் ஏரி உறைந்து போனது. மேலும் வீடுகளுக்கு செல்ல வேண்டிய குழாய்கள் பனிகட்டியானதால் தண்ணீர் சப்ளை பாதிக்கப்பட்டது.

மேலும் இருமல், மூச்சுத்திணறல் போன்றவற்றால் குழந்தைகள், பெரியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கடும் குளிரால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். பனி மூட்டம் காரணமாக சில இடங்களில் சிறு, சிறு விபத்துகளும் ஏற்பட்டுள்ளது

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!