கடைமடை பகுதி வாய்க்கால்கள்… கலெக்டர், எம்எல்ஏ ஆய்வு

பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை கடைமடை பகுதி வாய்க்கால்கள் கலெக்டர் மற்றும் எம்எல்ஏ பார்வையிட்டனர்.

பட்டுக்கோட்டை கடைமடை பகுதி விவசாய நிலங்களுக்கு பாசனம் செய்ய தண்ணீர் வரவில்லை என்பது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. சி.வி. சேகரிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர் கலெக்டர் அண்ணாதுரையிடம் கூறியதை தொடர்ந்து கலெக்டர் அண்ணாதுரை பட்டுக்கோட்டை தாலுகா காவிரி கடைமடை பகுதிகளான வடகாடு வாய்க்கால், ராஜாமடம் வாய்க்கால், கல்யாண ஓடைவாய்க்கால் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது சி.வி.சேகர் எம்.எல்.ஏ. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் முருகானந்தம் மற்றும் கோட்டாச்சியர் பொதுப்பணிததுறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!