கட்டார் மற்றும் இலங்கைக்கு இடையிலான தொழில் உறவுகளை மேம்படுத்த திட்டம்

கட்டார் மற்றும் இலங்கைக்கு இடையிலான தொழில் உறவுகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான கலந்துரையாடலொன்று இரு நாடுகளினதும் பிரதிநிதிகளுக்கிடையில் இடம்பெற்றுள்ளது.

கட்டாரில் நிலவும் வேலைவாய்ப்புகள், எதிர்நோக்கக்கூடிய சவால்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

தமது நாட்டில் பணிபுரிய எதிர்பார்த்துள்ள இலங்கையர்களுக்கு தமது ஒத்துழைப்பினை வழங்கத் தயாரென கட்டார் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 117,000 இலங்கையர்கள் கட்டாரில் தொழில்புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!