கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஏழுபேர் காயமடைந்துள்ளனர்

ஜூலை 14 தேசிய நாள் நிகழ்வின் போது கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஏழுபேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் நால்வர் உயிருக்கு போராடி வருகின்றனர்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு, Gironde (Soulac-sur-mer) பகுதியில் இடம்பெற்றுள்ளது. கட்டிடம் ஒன்றின் பல்கனி பகுதியில் பத்துபேர் வரை கூடி நின்று வானவேடிக்கையை பார்வையிட்டுக்கொண்டிருக்கும் போது, திடீரென கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அங்கு நின்றிருந்தவர்களில் ஏழு பேர் கீழே விழுந்துள்ளனர். கட்டிடம் உடைந்து விழுந்ததில் ஏழுபேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் நால்வர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலங்குவானூர்தி மூலம் Bordeaux பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 48 வயதுடைய பெண்மணி ஒருவர் மிக ஆபத்தான நிலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார். தீயணைப்பு படையினர் தெரிவித்த தகவல்களின் படி, குறித்த 10 பேரும் சுற்றுலாப்பயணிகள் எனவும், வாகடைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். அப்பகுதி ஜோந்தாம் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Sharing is caring!