கணவன் – மனைவி இருவரும் எதிர்த்து போட்டி
ஜெய்ப்பூர்:
கணவரை எதிர்த்து மனைவியும் களம் காண்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்துதான் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் சட்டசபையில் 200 தொகுதிகளுக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடக்கிறது. 3,295 வேட்பாளர்கள் களத்தி்ல் உள்ளனர்.
இந்நிலையில் பிகானூர் மாவட்டம் கிழக்கு பிகானூர் தொகுதியில் ஸ்வரூப் சந்த் கெலாட் என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அவரது மனைவி மஞ்சுலதா கெலாட் என்பவரும் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இருவருமே ஒன்றாக வாழ்த்து வரும் தம்பதியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இருவரும் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
எங்களுக்கு திருமணமாகி 35 ஆண்டுகள் ஆகிறது. மூன்று மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. சந்தோஷமாக வாழ்த்து வருகிறோம். தற்போது நடக்க உள்ள தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறோம். இதில் யாராவது ஒருவர் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி– பத்மா மகன், திருச்சி