கணவரை பழி வாங்க திட்டமிட்ட மனைவி – அதிரடி

அவுஸ்திரேலியாவில் காதல் கணவருக்கு வேறொரு இளம் பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அறிந்த மனைவியின் அதிரடி நடவடிக்கை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சிட்னி நகரில் குடியிருந்து வருபவர்கள் மெல் மற்றும் மார்ட்டின் தம்பதிகள்.

கணவர் மார்ட்டின் பணி நிமித்தம் மாதத்தின் பெரும்பாலான நாட்கள் பயணத்திலேயே இருந்து வந்துள்ளார்.

கனடா நாட்டிற்கு தான் அவர் அதிக முறை பயணம் மேற்கொண்டுள்ளார். வீட்டுக்கு திரும்பினாலும் கணினியில் நேரத்தை செலவிடுவார். அதிக வேலை இருப்பதாகவும் தொல்லை தர வேண்டாம் எனவும் மனைவியிடம் கூறியிருந்தார்.

இந்த நிலையில் காதல் கணவரின் நடவடிக்கையில் சந்தேகத்துடனே இருந்து வந்த மெல், ஒருநாள் வாய்ப்பு அமைந்தபோது கணவரின் மொபைல் மற்றும் அவர் பயன்படுத்தும் மடிக்கணிணியை பரிசோதித்துள்ளார்.

அதில் பதிவான தகவல்கள் மெல்லுக்கு பேரிடியாக இருந்தது. தமது கணவருக்கு கனேடிய இளம் பெண்ணுடன் தொடர்பு இருப்பதும், கூடிய விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதும் தெரியவந்தது.

மட்டுமின்றி மார்ட்டின் திருமணமானவர் என்ற தகவல், அந்த கனேடிய பெண்ணுக்கும் தெரியும் என்பதும் மெல் புரிந்து கொண்டார்.

இதனையடுத்து கணவரை பழி வாங்க திட்டமிட்ட மெல், மார்ட்டின் கனடா சென்ற நாளில் முக்கிய முடிவொன்றை எடுத்தார்.

அதாவது கணவருடன் குடியிருந்த வீட்டை விற்றுவிட்டார். அந்த வீடு இருவரின் பெயரில் இருந்தாலும், ஆவணங்கள் அனைத்தும் மெல் பெயரில் இருந்ததால் சிக்கல் ஏதும் ஏற்படவில்லை.

வீடு விற்று கிடைத்த பணத்தில் பாதியை தமது வங்கி கணக்கிலும், பாதியை இருவருக்கும் பொதுவான வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

கணவர் நாடு திரும்பும்போது என்ன நடக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ளவே காத்திருக்காமல் மெல் வேறு பகுதிக்கு சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sharing is caring!