கதம்ப வண்டு கடித்து 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை

மானாமதுரை:
கதம்ப வண்டு கடித்து 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மானாமதுரை அருகே கதம்ப வண்டு கடித்து 10 பேர் காயம் அடைந்தனர். மானாமதுரைை அருகே உள்ள கீழப்பசளையைச் சேர்ந்த முத்துராமு, கீதா, பொண்ணுமுத்து, விஜயா, மதி, சரண், காசிலிங்கம், கல்யாணி, பிரபா, லெட்சுமி ஆகியோர் வயல்வெளியில் வேலைபார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த மோட்டார் அறையில் இருந்து வந்த கதம்பவண்டுகள் கடித்து காயமடைந்து மானாமதுரை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். இதில் முத்துராமு, கீதா, பொண்ணுமுத்து ஆகியோர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!