கனடாவில் அதிர்ச்சி….மரம நபர் துப்பாக்கி சூடு….2 போலிஸ் பலி

கனடாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீசார் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கனடாவின் நியூ ஃபர்ன்ஸ்விக்(New Brunswick) மாகாணத்தின் தலைநகரான ஃப்ரெடெரிக்டன் (Fredericton) நகரில் குடியிருப்புப்பகுதி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் இரண்டு போலீசார் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில் அந்த மர்ம நபர் பிடிபட்டார். அவரிடம் இது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் தொடர்ந்து வரும் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் தற்போது கனடாவிலும் தொடர்கிறது குறிப்பிடத்தக்கது. கனடாவில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sharing is caring!