கனடாவில் இலங்கை பிரஜைக்கு சிறை

கனடாவில் மூன்று வாரங்களில் 7 வங்கிக்கொள்ளைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை பிரஜை ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எரங்க டி சில்வா என்ற இந்த இலங்கையர் 2016ஆம் ஆண்டு இந்த வங்கிக்கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த வங்கிக்கொள்ளைகளின்போது தாம் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளை வைத்திருப்பதாக அவர் அச்சுறுத்தியபோதும் அவற்றை காட்டி கொள்ளைகளில் ஈடுபடவில்லை

அத்துடன் குறித்த கொள்ளைகளின்போது மொத்தமாக அவர் 2360 டொலர்களையே கொள்ளையிட்டுள்ளார்.

1997ஆம் ஆண்டு கனடாவுக்கு வந்த டி சில்வாவின் குடும்பத்தினருக்கு 2013ஆம் ஆண்டு கனேடிய பிரஜாவுரிமை கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!