கனடாவில் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபரின் புகைப்படத்தை வெளியிடட பொலிஸார்

கனடாவில் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபரை கண்டுபிடித்து தர வின்னிபெக் பொலிஸார் பொது மக்களிடம் உதவியை நாடியுள்ளனர். இதில், 27 வயதுடைய டெரெக் விசெனாண்ட் (Derek Whisenand) என்பவர் மர்ம நபர் ஒருவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், இதில் தொடர்புடைய ஜூன் 24 அன்று மானிட்டோபாவுக்குள் நுழைந்த சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த நபரின் அடையாளங்களாக பொலிஸார் கூறும்போது, ஆறு அடி உயரம், சுமார் 230 பவுண்டுகள் எடை , பழுப்பு நிற கண்கள் மற்றும் பழுப்பு நிற முடி உடையவர் ஆவார்.

மேலும், குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 911 மற்றும் 204-324-9177 or Crime Stoppers at 1-800-222-TIPS (8477) என்ற இலக்கு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Sharing is caring!